இடைநிலைப்பள்ளிக்குப் பிறகு உங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க தொடங்கி இருப்பீர்கள்: எந்த வழிப்பாதையை அடுத்து நீங்கள் தேர்வுச் செய்ய வேண்டும்? எந்தத் துறையில் நீங்கள் பயில வேண்டும்? உங்களின் பொருளாதார நிலைப்பாடு மற்றும் திறன்களுக்கு ஏற்ற சிறந்த உயர்நிலைக் கல்விக்கூடம் எது?

உங்களின் இலக்கை அடைந்திட தரமான மேற்படிப்பு ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றது என்பது நீங்கள் அறிந்த ஒன்றே. நீங்கள் உங்கள் வாழ்வினில் எடுக்கப் போகின்ற மிக முக்கியமான முடிவுகளுக்கு உதவவே Closing The Gap Malaysia உள்ளது.

புதியது என்ன?

இந்த சாதனத் தொகுப்பில் அறிவுரை, தகவல், மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் தங்களை உயர்நிலைக் கல்விசார்ந்த விடயங்களில் ஈடுபடுத்தும் வாய்ப்புகள் அனைத்தும் அடங்கும்.

அண்மைய சாதனத் தொகுப்பின் இணைப்பை கீழே காணலாம்-முழு உள்ளடக்கத்தையும் அணுக கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை தட்டவும்.

சாதனத் தொகுப்பு பயன்படுத்துதல்

இந்தச் சாதனத் தொகுப்பு உங்கள் திட்டமிடலுக்கான ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டவரையை உங்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது,உயர்நிலைக்கல்வி அறிதல் குறித்து இந்தத் சாதனத் தொகுப்பானது நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது (கீழே).

.உயர்நிலைக்கல்வி அறிதலை மேற்கொள்ளுங்கள். உங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்.

பகுதி 1: நான் யார்?

நாம் அனைவருக்கும் விருப்பமான வரலாற்றாசிரியர் ஜார்ஜ் சன்டயானா அவர்களின் மேற்கோற்படி — 'உங்கள் எதிர்காலத்தை அறிய உங்கள் கடந்த காலத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்'. உங்கள் வாழ்க்கை வரைபடத்தை வரையும்போது உங்கள் கடந்தக் கால வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை கண்டறிந்து, அந்த அனுபவங்கள் உங்களை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதையும் ஆராயுங்கள்.

வாழ்க்கை வரைபடம்

SPM தேர்வுக்கு பிந்தைய வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன. ஒவ்வொரு துறைச்சார்ந்த பாடத்திலும் அதற்குரியத் தனித்துவமான நன்மைகளும் சவால்களும் அடங்கி உள்ளன. இங்கே மலேசியாவில் உள்ள மூன்றாம் நிலை கல்வியின் வழிமுறைகள் ஒரு கண்ணோட்டமாக வழங்கப்படுகிறது-உங்களுக்கான சிறந்த தேர்வு எது என்பதை கண்டறிய கண்டிப்பாக ஆராய்ந்துப்பாருங்கள்!

SPM/STPM தேர்வுகளுக்கு பின்னர் என்ன?

பகுதி 2: நான் எங்கே செல்கிறேன்?

இந்நாள் வரை எது உங்கள் வாழ்வினை வடிவமைத்தது என்று நீங்கள் கண்டறிந்ததும், உங்களுக்கானது அடுத்தது என்ன? நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் யாராக விரும்புகிறீர்கள்? உங்கள் எதிர்காலத்தை நீங்கள் கற்பனை செய்யும் போது — எந்த மாரியான அலுவலில் அல்லது கல்லூரியில் உங்களை காண்கிறீர்கள்? நீங்கள் எவ்வாறு நினைவிலிருக்க வேண்டும்? இவை அனைத்தையுமே அறிந்துக்கொள்ள TIM கருவி மற்றும் RIASEC சோதனை உங்களுக்கு உதவி புரியும்.

நான் என்ன படிக்க வேண்டும்?

நீங்கள் தொடர்விருக்கும் மேற்கல்வி விருப்பத் தேர்வுகளில் சிலவற்றை ஏற்கனவே அடையாளம் கண்டிருப்பீர்கள்,ஆனால் உங்கள் இலக்கையடையும் வரையில் உங்களுக்கு தொடர்ச்சியான ஊக்கம் தேவைப்படும். உங்கள் வாழ்க்கை செவ்வனே அமைவதற்கு, கல்வி உதவித்தொகை ஒரு சிறந்த வழியாகும், இது பொருளாதாரத்தை மட்டும் குறிப்பிடாது- கல்வி உதவித்தொகை பெறுவதின் மூலம் நம் சுமைகள் குறைக்கப்படும், அதோடு உயர்நிலைக்கல்வி மற்றும் புகுமுகத் திட்டத்தைச் சார்ந்தக் கூறுகளை மேம்படுத்த முடியும். கல்வி உதவித்தொகையைக் குறித்த தேடலில் ஈடும்படும்போது நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. கருத்தில் கொள்ளுங்கள், ஆய்வுதான் தான் திறவுகோல்!

கல்வி உதவித்தொகைகள் குறித்த ஓர் அறிமுகம்

பகுதி 3: நான் எப்படி அங்கு செல்வதது?

உதவித்தொகை விண்ணப்பங்களின் செயல்முறை நீண்டதாக மற்றும் சவாலானதாக இருக்கலாம், ஆனால் கவலைப்பட வேண்டாம். இந்த பிரிவில், உதவித்தொகை விண்ணப்பக் கட்டுரை எழுதுவதை நாம் காண்போம். கட்டுரைகளை எழுதுவது சவாலானது, ஆனால் நீங்கள் தொடங்குவதற்கு உதவும் கட்டமைப்புகளை நாங்கள் தயார் செய்துள்ளோம்.